நடிகர் சூர்யா கைதி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஆவலாக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான கைதி திரைப்படம் பிகில் என்ற மிகப்பெரிய படத்தோடு மோதி பிளாக்பஸ்டர் ஹிட்டாக வசூல் மழை பொழிந்தது. அதையடுத்து அவர் இப்போது இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக மாறியுள்ளார் லோகேஷ்.
இந்நிலையில் இப்போது நடிகர் சூர்யாவும் லோகேஷுடன் இணைந்து ஒரு படம் பண்ண ஆவலாக இருப்பதாக தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளாராம். கைதிப் படம் பார்த்துவிட்டே லோகேஷின் திறமையை வியந்த சூர்யா இந்த ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். கைவசம் உள்ள ஒரு தெலுங்கு படம், ரஜினி படம் ஆகியவற்றை முடித்துவிட்டு கைதி 2 படம் பண்ண இருக்கிறார் லோகேஷ். அதன் பின்னர் சூர்யாவுடன் இணைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…
Pongal Release:…
Sun serials:…
Veera Dheera…