யெஸ் பேங்க் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அதோடு இணைந்து ஒப்பந்தம் செய்துள்ள போன் பே இணைய செயலி முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக தனியார் வங்கியான யெஸ் பேங்க் கடுமையான நிதி நெருக்கடியால் பாதிக்கபப்ட்டுள்ளது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி அந்த வங்கியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதன் ஒரு கட்டமாக யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
யெஸ் பேங்க்கினை நிர்வாகம் செய்ய எஸ்பிஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. யெஸ் பேங்குடன் கூட்டு வைத்துள்ள போன்பே, பாரத்பே ஆகிய ஆப்களின் பணபரிவர்த்தனையிலும் பிரச்சனை எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த செயலியை உபயோகித்தவர்களுக்கு தற்காலிகமாக சேவை இல்லை. மன்னிக்கவும், விரைவில் சேவையை வழங்குவோம் என பதில்கள் வந்துள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…