நேற்று திடீரென்று தமிழக பாஜக பிரபலங்கள் வீட்டில் முருகனை வணங்குவது போன்ற புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.
தமிழ்க் கடவுள் என்று சொல்லப்படும் முருகனின் புகழ்பாடும் கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதாக தமிழக பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். இதனைக் கண்டித்து இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து அந்த சேனலை சேர்ந்த சுரேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதையடுத்து நேற்று தமிழக பாஜக பிரபலங்கள் தங்கள் வீட்டில் முருகன் படத்தை வைத்து வழிபடுவது போல புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். ஆனால் அந்த புகைப்படங்களில் ஒன்றில் கூட முருகன் புகைப்படம் பூஜையறையில் இல்லை. சமையலறையிலும், ஹாலிலும் புகைப்படங்களை வைத்து வழிபடுவது போல புகைப்படம் எடுத்து பதிவேற்றியுள்ளனர்.
இதையடுத்து சமூகவலைதளங்களில் ‘ஏன் உங்கள் வீட்டு பூஜையறையில் முருகன் படத்தை வைத்து வழிபட மாட்டீர்களா’ என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் தமிழ் கடவுளான முருகனுக்கு கோயிலில் தமிழில் வழிபாடு நடத்த பாஜகவினர் சம்மதிப்பார்களா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
Sun serials:…
Veera Dheera…
மஞ்சுவாரியர் பெயரை…
Biggboss Tamil:…
கன்னட உலகின்…