தமிழ் சினிமாவில் தனது கிளாஸ் மற்றும் மாஸான நடிப்பால் தனக்கென ரசிகர் கூட்டத்தையும் பல விருதுகளையும் பெற்றவர் விக்ரம். தனது ஒவ்வொரு படத்திலும் தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை ஏற்றி இறக்குவது, உடலமைப்பை மாற்றிக் கொள்வது என அர்ப்பணிப்போடு செயல்படும் ஹீரோவாக இருந்து வருகிறார்.
ஆனால் அவர் நடிப்பில் கடைசியாக 2006 ஆம் ஆண்டு வெளியான அந்நியன் படத்துக்குப் பிறகு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ஒரு படம் இன்னும் அமையவில்லை. இப்போது அவர் கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் மகாவீர் கர்ணா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை நடித்து முடித்த பின்னர் அவர் திரையுலகில் இருந்து விலக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் சினிமாவில் அறிமுகமாகியுள்ள தனது மகன் நடிக்க வேண்டிய படங்களில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ள்ளார்.
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…
கங்குவா படத்திற்கு…
Pushpa 2:…