இந்த ஆண்டு விக்ரம் படம் ரிலீசாகுமா? ரசிகர்கள் ஏமாற்றம்

Published on: January 20, 2020
---Advertisement---

ba32df0bcdfac7dc3a823444f88d8a67

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய இயக்கிவரும் ’கோப்ரா’ திரைப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் அடுத்த ஆண்டு தான் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது

’கோப்ரா’  படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது இரண்டு கட்ட படப்பிடிப்புகள் மட்டுமே முடிவடைந்ததாக தெரிகிறது. மேலும் வரும் பிப்ரவரி முதல் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திற்காக நீண்ட கால்ஷீட்டை விக்ரம் கொடுத்துள்ளதால் ’கோப்ரா’  படத்திற்கு அவர் திரும்ப இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது 

மேலும் ’கோப்ரா’ திரைப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட கேரக்டர்களில் விக்ரம் நடித்து வருவதால் அந்த கெட்டப்பிற்காக காலதாமதம் ஆவதால் இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் தான் முடிவடையும் என்றும் அடுத்த ஆண்டுதான் இந்த படம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ’பொன்னின் செல்வன்’ திரைப்படமும் இந்த ஆண்டு தான் வெளியாகும் என்பதால் அடுத்த ஆண்டு விக்ரம் ரசிகர்களுக்க்கு இரட்டை சந்தோஷம் உள்ளது.

Leave a Comment