More

உங்கள் ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுமா? அப்படியானால் அவர்கள் யார் ? –சீமானின் நெத்தியடிக் கேள்வி !

தூத்துக்குடிக்கு வந்து துப்பாக்கிச் சூடு சம்மந்தமாக விளக்கமளிக்க மறுக்கும் ரஜினியை சீமான் டிவிட்டரில் கேலி செய்துள்ளார்.

Advertising
Advertising

கடந்த் 2018 ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் 13 பொதுமக்கள் பலியானார்கள். அப்போது தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் ‘கூட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது’ எனக் கூறி சர்ச்சைகளைக் கிளப்பினார். அப்பொது ரஜினியின் பேச்சுக்கு பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் எதிர்ப்பு உணடானது.

தூத்துக்குடி சம்பவம் தொரர்பாக விசாரணை செய்துவரும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினியை நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. ஆனால் அதற்கு மறுத்த ரஜினி எழுத்துப் பூர்வமாக விளக்கமளிக்க விரும்புவதாக தெரிவித்தார். மேலும் ‘நான் தூத்துக்குடிக்கு வந்தால் ரசிகர்கள் கூட்டம் கூடி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும்’ எனத் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்' என்று சொல்ல தூத்துக்குடி சென்றபோது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்போது மட்டும் கெட்டுவிடுகிறதா?

ரசிகர்கள் கூடி சட்டம் ஒழுங்கு சீர்குலையுமென்றால், உங்கள் ரசிகர்கள் யார்? இது எப்டி இருக்கு?! ‘ என ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Published by
adminram

Recent Posts