பெண்களை வலுக்கட்டாயமாக முத்தமிடும் நபர் – வீடியோவால் அதிர்ச்சி

மும்பை மதுங்கா ரயில்வே நிலையத்தில் ஒரு இளம்பெண் நடந்து சென்று கொண்டிருக்க, அவரை நோக்கி வரும் ஒரு வாலிபர் அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடி விடுகிறார். இது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வாலிபர் தொடர்ந்து இப்படி செய்து வருபவர் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு திருட்டு வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். ஆனாலும், அவரால் பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் அவர் மீது புகர் கொடுக்காததால் அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. எனவே, கைது செய்யப்பட்ட அவர் தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

Published by
adminram