Connect with us
banner

ஷேர் ஆட்டோவில் பெண்ணின் அபயக்குரல் – காப்பாற்றிய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் !

ஷேர் ஆட்டோவில் பெண்ணின் அபயக்குரல் – காப்பாற்றிய இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் !

ஷேர் ஆட்டோவில் கடத்தி சென்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

fb65c011f9ce07d37c72a10765b526c5

ஷேர் ஆட்டோவில் கடத்தி சென்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற பெண்ணை காப்பாற்ற முயன்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொண்டஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன் மற்றும் பத்மாவதி ஆகிய தம்பதியரின் கடைசி மகன் யாகேஷ். தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராகப் பணிபுரியும் இவர் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தனது கிராமத்தில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவர்களைக் கடந்து சென்ற ஷேர் ஆட்டோ ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் அபயக்குரல் கேட்க நண்பர்கள் அனைவரும் ஷேர் ஆட்டோவைத் தொடர்ந்துள்ளனர். இதையறிந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் பெண்ணை தள்ளிவிட்டு விட்டு வேகமாக சென்றுள்ளார். பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஆட்டோவைத் தொடர்ந்து சென்றுள்ளார் யாகேஷ்.

ஆட்டோவை முந்திவிட்டு அதற்கு முன்னாள் சென்று பைக்கை அவர் நிறுத்த, பின்னால் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை அவர் மேல் மோதியுள்ளார். இதில் படுகாயமடைந்த யாகேஷ் சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 28 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top