இரண்டு ஆண்களிடம் நெருக்கமாகப் பழகிய பெண் – உண்மை தெரிந்ததால் மருத்துவமனையில் விபரீதம் !

Published on: January 6, 2020
---Advertisement---

005c59d665e0a5df0387e875430cb825-1

சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஒருவர் இரு ஆண்களிடம் நெருக்கமாகப் பழகியதால் இருவருக்கும் இடையில் மோதல் எழுந்து வெட்டுக்குத்து வரை சென்றுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த அந்த பெண் கணவனை இழந்தவர். இதனால் அவருக்கும் அவர் வசிக்கும் பகுதியில் இருந்த ஐய்யப்பன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாகப் பழகியுள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களாக அந்த பெண் மருத்துவமனையில் தன்னோடு பழகும் ரவி என்பவரோடும் நெருக்கமாகப் பழகுவது ஐய்யப்பனுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் அய்யப்பன் மிகுந்த் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மருத்துவமனைக்கு வந்த அய்யப்பன் பணியில் இருந்த ரவியிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை வெட்ட ஆரம்பித்துள்ளார். இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் பீதியடைய காவலுக்கு இருந்த போலீஸ்காரர்கள் வந்து ஐய்யப்பனை பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் பரபரப்பானது.

Leave a Comment