கேரளாவில் அஞ்சுமுக்கு எனும் பகுதியில் வசித்து வந்த ஷைலா என்ற பெண்ணின் கள்ளக்காதலன் அவரைக் குத்திக் கொலை செய்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு அருகேயுள்ள அஞ்சுமுக்கு எனும் பகுதியைச் சேர்ந்தவர் ஷைலா. இவரது கணவர் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் ஷைலா அதேப் பகுதியில் இருக்கும் அனிஷ் என்ற லாரி ஓட்டுனருடன் நெருக்கமாக பழக இதுகுறித்து வெளிநாட்டில் இருக்கும் அவரது கணவருக்குத் தெரிந்துள்ளது.
இதனால் அவர் ஷைலாவை விவாகரத்து செய்வதாக சொல்ல, குழந்தைகளின் எதிர்காலத்துக்காக தனது கள்ளக்காதலை முறித்துக் கொள்ள முடிவு செய்தார் ஷைலா. இதனால் அனிஷ் கோபமாகியுள்ளார். அவர் பலமுறை போன் செய்தபோதும் ஷைலா அதை எடுக்க மறுத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் ஷைலா தனது குழந்தைகளோடு பள்ளியில் இருந்து வந்தபோது அவரை மறித்த அனிஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாகக் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஷைலாவை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் முன்னராகவே ஷைலா உயிரிழந்துள்ளார்.
Keerthi suresh:…
Biggboss Tamil:…
ஆயுத பூஜையை…
எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா…
Pushpa 3:…