ராமநாதபுரத்தில் ஒரு பெண் 3 பேருடன் சேர்ந்து வாழ்ந்ததால் பிறந்த குழந்தையை யாரிடம் ஒப்படைப்பது என்ற குழப்பம் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 8 மாதக் குழந்தையை விற்றுவிட்டதாகப் புகார் எழுந்ததை அடுத்து விசாரணையில் இறங்கிய அதிகாரிகள், அந்தப் பெண்ணை குழந்தையுடன் அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.
ஆனால் அங்கேதான் குழப்பமே உருவாகியுள்ளது. அந்த பெண் 3 ஆண்டுகளுக்கு முன் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால் அவருக்கு வினோத் என்ற நபருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்ததால் அவரது கணவர் விவாகரத்து செய்துள்ளார். இதையடுத்து வினோத்தோடு சேர்ந்து வாழ்ந்துள்ளார் அந்த பெண். வினோத் வெளிநாடு சென்றவர் அங்கேயே இறந்துவிட்டார்.
இதனால் அந்த பெண் மூன்றாவதாக ஒரு மாற்றுத்திறனாளியை மணந்து கொண்டுள்ளார். இப்போதுதான் பிறந்த குழந்தையை வினோத்தின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால் வினோத் வெளிநாடு சென்ற போது அந்த பெண்ணுடன் தான் நெருங்கி பழகியதாகவும் அதனால் பிறந்ததே அந்த குழந்தை என்று சரத் என்பவர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான அதிகாரிகள் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு டி என் ஏ சோதனைக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம், குழந்தை, 3 கணவர், டி என் ஏ, ramanadhapuram, child, husbands, DNA
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…