காதலை ஏற்காத மாணவி… பெண்ணின் தந்தையிடம் வேலைக்குச் சேர்ந்த இளைஞர் – கொடூர கொலை !

ஆந்திராவைச் சேர்ந்த துர்காராவ் என்ற இளைஞர் தன் காதலை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலத்தில் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தவர் ஜெயராஜ். இவரிடம் சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த துர்காராவ் என்ற இளைஞர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இவர் ஜெயராஜின் மகள் பிரியாவை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலுக்கு பிரியா சம்மதம் தெரிவிக்காததால் நேற்றிரவு அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து துர்காராவைக் கைது செய்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் துர்காராவ், பிரியா ஆந்திராவில் பள்ளியில் படிக்கும் போதே அவரை ஒருதலையாக காதலித்ததாகவும் ஆனால் பிரியா சம்மதிக்காததால் அவரின் தந்தையிடம் வேலைக்குச் சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
adminram