சென்னை திருவான்மியூரில் உள்ள கோயிலில் செல்பொன்கள் திருடியதாக கைது செய்யப்பட்ட பெண் திடுக்கிடும் பல தகவல்களை சொல்லியுள்ளார்.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால் கோயிலில் சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்பட்டன. அப்போது சந்தேகத்துக்கு இடமாக உலவிக் கொண்டிருந்த பானு என்ற பெண்ணை அழைத்து விசாரிக்க அவர் இடுப்பில் இருந்த பேக்கில் வைத்திருந்த செல்போன்கள் பல கீழே விழுந்தன.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பானு இது போல திருட்டு வழக்குகளில் அடிக்கடி சிறைக்கு செல்வதும் பின்பு ஜாமீனில் வெளிவந்து திருட்டு வேலைகளில் இறங்குவதும் என வாடிக்கையாகக் கொண்டுள்ளார். கூட்டமான பேருந்துகளில் ஏறும் பானு ஆண்கள் அருகே நின்று அவர்களிடம் பேச்சுக்கொடுத்து திசை திருப்பி அவர்களின் பர்ஸ் மற்றும் செல்போன்களை திருடுவதில் கில்லாடி என சொல்லப்படுகிறது.
கோயில், திருட்டு, பெண், செல்போன், பானு, temple, theft, woman, banu
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…
தற்போது விஜய்…