
சாலைகளில் பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை பயன்படுத்த வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறுவுறுத்தியதை அடுத்து அப்பணிகளில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் விஐபிக்கள் வரும் போது சாலையோரங்களில் பெண்கள் கால்கடுக்க நிற்கும் வேலை இனிமேல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.





