நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் காவல் அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். இப்படம் பற்றிய எந்த தகவலும் வெளியாகாமல் மயான அமைதியாக இருக்கிறது. இப்படம் பற்றிய அப்டேட்டை கொடுக்குமாறு அஜித் ரசிகர்கள் தினமும் இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரிடம் கேட்டு வருகின்றனர். ஆனால், மனுஷன் வாயை திறக்காமல் இருக்கிறார்.
இந்நிலையில், காவல்துறை அதிகாரிகளுடன் அஜித் நிற்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அவர்கள் காஞ்சிபுரம் போலீஸ் படை எனவும், அவர்களுடன் இணைந்து அஜித் பயிற்சி எடுத்து வருகிறார் எனவும் அஜித் ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.
வலிமை படம் பற்றிய எந்த செய்தியும் வெளியாகாத நிலையில், இந்த புகைப்படங்கள் அஜித் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…