வாவ்… மீண்டும் சாக்லேட் பாயாக வந்த பிரசாந்த் ! தெறிக்க விடும் அந்தாதூன் கெட்டப் !

Published on: February 27, 2020
---Advertisement---

bfc0595bbd8f156ae21ca896ff9bc3c6

அந்தாதூன் படத்திற்காக உடல் எடையை குறைத்து முடி வளர்த்து வித்தியாசமான கெட்டப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரசாந்த்

நடிகர் பிரசாந்த் 90 களில் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவைக் கலக்கி கொண்டு இருந்தார். அதன் பின்னர் அவரது படங்கள் சரியாக போகாததால் மார்க்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன் பின் ஆண்டுக்கு ஒரு படம் என நடித்துவந்தாலும் எதுவும் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் எப்படியாவது ஹிட் கொடுத்து விட வேண்டும் என்பதற்காக இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மோகன் ராஜா இயக்க இருக்கிறார். இந்த படத்துக்காக இளமையான தோற்றத்துக்காக பிரசாந்த் உடல் எடையைக் குறைத்து முடிவளர்த்து மீண்டும் தனது சாக்லேட் பாய் தோற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment