கேஜிஎஃப் 2 ரிலீஸ் தேதி இதுதான்! - ஷாக் ஆன ரசிகர்கள்.......

by adminram |

57bd028dfb54bf195e620c299fc3ff81

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப். படம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரீச்சானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளில் இப்படம் வரவேற்பை பெற்றது. தற்போது கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில், கேஜிஎஃப் 2 படத்தை ரூ.250 கோடி வரை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ஆனால், இப்படம் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் என அப்படத்தின் தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளார்.

685b0bb2c076032b281979e28e4941d4

இந்நிலையில், இப்படம் 2022 ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அப்படத்தின் ஹீரோ யாஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தியேட்டர்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், இப்படம் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம்தான் இப்படம் வெளியாகிறது. அதற்கு இன்னும் 7 மாதங்கள் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படத்தின் சேட்டிலைட் எனும் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இந்த தொலைக்காட்சியிலேயே கேஜிஎஃப் 2 வெளியாகவுள்ளது. அதேநேரம் தியேட்டர் ரிலீஸுக்கு பின்னரே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

db05a947bac9039f8e4658274d3aec10-3

Next Story