நீ இப்போது தேவதை!...இறந்து போன பவானியுடன் நான்!... யாஷிகா வெளியிட்ட வீடியோ...

by adminram |

468dfd1ca544fb676dc2fc2aee2bd943

துருவங்கள் பதினாறு படத்தில் அறிமுகமானாலும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்கிற திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின் நோட்டா, ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். தற்போது பட வாய்ப்புகள் இல்லையென்பதால் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து தினமும் சில புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

6684d34d6e245ae75b27d6801b3642d4-1
yashika

ஆனால், கடந்த ஜூலை மாதம் நடந்த கார் விபத்தில் சிக்கினர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற போது பழைய மகாபலிபுரம் அருகே அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மீதி விபத்து ஏற்பட்டது. இதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

e49bdd25946eb92e500fc5ad9891e3b0-2
yashika

இந்நிலையில், இறந்து போன தனது தோழி பவானியுடன் எடுத்துக்கொண்ட வீடியோவை பகிர்ந்து ‘என் நலம் விரும்பி மற்றும் சகோதரி. கடந்த காலத்திற்கு சென்று எல்லாவற்றையும் மாற்ற விரும்புகிறேன். நீ கொடுத்த நினைவுகள் மறக்க முடியாதது.நீ இப்போது தேவதையாக இருக்கிறாய். மேலை இருந்து எங்களை பார்த்துக்கொண்டிருப்பாய்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

03f960931d33bc3fb7544f219f4d7785

Next Story