முதல்வர் ஸ்டாலினுடன் ஒரு செல்பி… வைரலாகும் யாஷிகா புகைப்படம்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆரோக்கியத்திற்காக ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் எதிர்கட்சி தலைவராக இருந்த போதிலிருந்தே இதை தவறாமல் செய்து வருகிறார். அப்போது, அவருடன் பொதுமக்கள் பலரும் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

தற்போது அவர் முதல்வராகியுள்ள நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம்போல் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டார். முதல்வர் என்பதால் பலரும் அவருடம் தங்கள் செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஸ்டாலினும் அவர்களுடன் சிரித்தபடி போஸ் கொடுத்தார். ‘மக்கள் சுலபமாக அணுகும் எளிமையான முதல்வர்’ என பதிவிட்டு பலரும் இது தொடர்பான புகைப்படங்களை நேற்று பகிர்ந்தனர்.

இந்நிலையில், சினிமா நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான யாஷிகா ஆனந்தும் நேற்று ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். யாஷிகாவும் நேற்று சைக்கிள் பயிற்சி மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram