பல வருடங்களுக்கு பின் மீண்டும் ‘ஒலிச்சித்திரம்’: என்ன படம் தெரியுமா?

இந்த நிலையில் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு ’96’ திரைப்படம் தனியார் வானொலி நிலையமான ரேடியோ சிட்டியில் இரவு 9 மணிக்கு ஒலிச்சித்திரமாக ஒளிபரப்பாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சி மற்றும் செல்போன் இல்லாத காலங்களில் ஒலிச்சித்திரம் என்ற நிகழ்ச்சி அன்றைய சினிமா ரசிகர்களிடையே மிகப் பெரிய புகழ் பெற்றது என்பது ஒருசிலருக்கு மட்டுமே தெரியும்.

இன்றைய இளைஞர்கள் கேள்விகூட பட்டிராத இந்த ஒலிச்சித்திரம் தற்போது மீண்டும் ரேடியோசிட்டி வானொலியில் ஒளிபரப்பாக உள்ளது. ஏற்கனவே 96 திரைப்படத்தை பார்த்தவர்கள் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ராம், ஜானு கேரக்டர்களை இந்த ஒலிச்சித்திரத்தை கேட்டுக்கொண்டே கற்பனையில் கற்பனையில் மிதந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் நாளை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram