யோகிபாபு கடந்த சில ஆண்டுகளாக காமெடி வேடங்களில் மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி போன்ற படங்கள் வெற்றி பெற்றதையடுத்து தற்போது காக்டெயில் என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிக்கும் இந்த படத்தில் யோகிபாபு ஜோடியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை விஜய் முருகன் என்பவரை இயக்கவுள்ளார் சாய் பாபா என்பவர் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் டீசர் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
காக்டெயில் என்ற இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையதளங்களை கலக்கி கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…