சுந்தரா டிராவல்ஸ் 2ம் பாகம் – வடிவேலு கதாபாத்திரத்தில் யோகிபாபு

மறைந்த நடிகர் முரளி, வடிவேல், ராதா, விணுசக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்து 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். ஒரு ஓட்டை பஸ்ஸை வைத்துக்கொண்டு முரளியும், வடிவேலும் செய்த காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. குறிப்பாக அந்த பேருந்தில் ஒரு எலி நுழைந்துவிட அதை கொல்ல வடிவேலு படாத பாடு படுவார். 

தற்போது, சுந்தரா ட்ராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இதில், வடிவேலுவும், நடிகர் கருணாகரனும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், வடிவேல் இடத்தை யாரும் பிடிக்க முடியாது, அவரைப் போல் யோகிபாபுவால் காமெடி செய்ய முடியாது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
 

Published by
adminram