கார் விபத்தில் சிக்கிய யோகிபாபு.. பெங்களூர் செல்லும் வழியில் அதிர்ச்சி..
தமிழ் சினிமாவில் காமெடியில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகி பாபு. சிறிய படங்கள் முதல் பெரிய படங்கள் வரை பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகராக இவர் திகழ்ந்து வருகிறார். சொல்லப்போனால் சினிமாவில் ஓய்வே இல்லாமல் 24 மணி நேரமும் நடிக்கும் நடிகராக திகழ்கிறார் யோகி பாபு. விஜய் அஜித் சூர்யா ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவருடைய காமெடி நல்ல முறையில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ஆரம்பத்தில் வில்லனாக நடித்து வந்த யோகி பாபு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தான் காமெடியில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார். இன்று பல முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக யோகி பாபுவை அனைவரும் பார்த்து வருகிறார்கள். இவருக்கு என தனி பேன்ஸ் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். அதே சமயம் இவர் மீது பல கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
உதவியாளர்களுக்கு குறைந்த அளவு சம்பளம் கொடுக்கிறார், இவருடைய பேச்சில் அடாவடித்தனம் என அவரைப் பற்றி அடுக்கடுக்கான புகார்களை கோடம்பாக்கத்தில் சில பேர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இவருடைய கார் விபத்தில் சிக்கி இருக்கிறது. வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் அதிகாலை இவர் சென்ற கார் விபத்தில் சிக்கி எந்தவித காயங்களும் இன்றி உயிர்த்தபியிருக்கிறார் யோகி பாபு .
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணிக்கு பெங்களூரை நோக்கி யோகி பாபு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுங்கச்சாவடியை கடந்த நிலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அவருடைய கார் நெடுஞ்சாலை நடுவில் உள்ள தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் எந்தவித காயங்களும் இன்றி யோகி பாபு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார் .
அதன் பிறகு வேறு ஒரு காரை வரவழைத்து அங்கிருந்து பெங்களூர் சென்று இருக்கிறார் யோகி பாபு. பின் ரோந்து போலீசார் விபத்தில் சிக்கிய யோகிபாபுவின் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஒரு செய்தி இப்போது கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.