லெஜண்ட் சரவணனுடன் பிறந்தநாள் கொண்டாடிய யோகிபாபு….வைரல் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து முன்னணி காமெடி நடிகராக உயர்ந்திருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்கிற அளவுக்கு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவருக்கென ரசிகர் கூட்டமே உருவாகியுள்ளனர். இவர் கடந்த 22ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜண்ட் சரவணா நடிக்கும் புதிய படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை உல்லாசம், விசில் ஆகிய படங்களை இயக்கிய இரட்டையர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கி வருகின்றனர். இந்த படக்குழுவினருடன் யோகிபாபு தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

Published by
adminram