தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உயந்திருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத திரைப்படங்களே இல்லை என்கிற அளவுக்கு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழகத்தில் பல திரைப்பட பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் யோகிபாபுவும் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். ஒரு தனியார் மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசியை அவர் போட்டுக்கொண்டார். மேலும், அந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் கார்த்தி தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் வெளியானது. மேலும், பல நடிகர், நடிகைகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ள துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதாகொங்கரா இயக்கத்தில்…
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…
தமிழ் சினிமாவில்…