">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நீ ஒரு பக்கா விஜய் ஜால்ரா… அடுத்து சாந்தனு பக்கம் திரும்பிய மீரா மிதுன்!
நடிகை மீரா மிதுன் கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் ஒவ்வொருவராக தாக்குதல் நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவுக்கு நடிப்பே வராது என சொல்ல அது அவரின் ரசிகர்களை பயங்கர கோபத்துக்கு ஆளாக்கியது.
அதை அடுத்து அவர்கள் மீரா மிதுனை சமூகவலைதளங்களில் ஆபாசமாக திட்ட ஆரம்பித்தனர். ஆனால் அப்படி ஆபாசமாக திட்டியவர்களில் பலர் சூர்யா ரசிகர்கள் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும், தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள மீரா மிதுன் ‘இனிமேல் என்னை யாராவது ஆபாசமாக திட்டினால் , நானும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவையும், விஜய்யின் மனைவி சங்கீதாவை என்னை சொல்லி திட்டும் அதே வார்த்தையில் திட்டுவேன் எனக் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாக விஜய் ரசிகர்கள் மீரா மிதுன் மீது போலீசில் புகார் அளித்தனர், அவரை எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து விஜய்யின் தீவிர ரசிகரும் நடிகருமான சாந்தனுவிடம் ரசிகர் ஒருவர், மீராமிதுன் அளவுக்கு மீறி சென்று கொண்டிருப்பத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டிருந்தார்.
அதற்கு சாந்தனு, அவரைப் பற்றி அதிகம் பேச பேச பப்ளிசிட்டி அவருக்கு அதிகம் ஆகும். எனவே அவரை தவிர்த்து விடுங்கள், அவரையும் அவருடைய பேச்சினியையும் தவிர்த்து விடுங்கள் என்று கூறினார். தற்ப்போது சாந்தனுவிற்கு பதிலடி கொடுத்த மீரா மிதுன் ’நீங்கள் ஒரு பக்கா விஜய் ஜால்ரா என்பது அனைவரும் அறிந்ததே மாஸ்டர் திரைப்படத்தல் உங்களை உங்கள் தந்தையார் புரமோட் செய்தது எனக்கு தெரியும். நீங்கள் விஜய்யின் பக்கா ஜால்ரா என்பது எனக்கு தெரியும் அந்த ஜால்ரா வேலையை தொடர்ந்து செய்யுங்கள் என்று குறிப்பிட்டு வம்பிழுத்துள்ளார்.