நீங்க தான் என் வாழ்க்கை – மனைவிக்காக உருகிய சஞ்சீவ்!

கர்பமாக இருக்கும் ஆல்யாவிற்கு தற்போது தான் வளைகாப்பு நடைபெற்றது. அதற்கான வீடியோவும் ரசிகர்களால் மிக அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது. அவ்வப்போது ஆல்யா மானஸாவுடன் அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

சஞ்சீவ் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'காற்றின் மொழி' சீரியலில் நடித்து வருகிறார். ஆல்யா அதே தொலைக்காட்சியில் நடக்கும் டான்ஸ் ஷோவில் நடுவராக உள்ளார்.

ஆல்யா மானஸா கர்ப்பமாக இருக்கும் நிலையில், ''நீங்கள் தான் என்னோட வாழ்க்கை'' என்று குறிப்பிட்டு  சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆல்யா மானஸாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் அதிகமான ரசிகர்களால் பார்வையிடப்பட்டு வருகின்றது.

Published by
adminram