">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
எனது குரலாக நீயும்… உமது முகமாக நானும்.. எஸ்.பி.பி. பற்றி கமல் உருக்கம்…
தமிழ் சினிமா மட்டுமில்லாமல், ஹிந்தி, தெலுங்கும், கன்னடம் உள்ளிட பல மொழிகளில் தனது இனிமையான குரலில் பல ஆயிரம் பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் குடியிருப்பவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.�
அவரும், அவரின் மனைவியும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இது இசை ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து தான் நலமாக இருப்பதாக ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டார்.
ஆனால், 2 நாட்களுக்கு முன்பு அவரின் உடல்நிலை மோசமானதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் இருப்பதாக கூறப்பட்டது. எனவே, இளையராஜா, பாரதிராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல பிரபங்கள் அவர் விரைவில் குணமடைந்து திரும்பவேண்டும் என பிரார்த்தனை செய்தனர். இசை ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் அவர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பிவிடுவார் என அவரின் மகன் சரண் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.
உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா— Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2020
இந்நிலையில், நடிகரும்,மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம். உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா’ என பதிவிட்டுள்ளார்.
அன்பிற்கினிய அன்னைய்யா, உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
எனது குரலாக நீங்களும், உமது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.
உங்கள் குரல் இன்னும் ஒலித்திட வேண்டும். மீண்டும் வாருங்கள். தொரகா ரண்டி அன்னைய்யா— Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2020