சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் தான் நடிப்பதாகவும், அப்படத்திற்காக தான் பெறும் முன் பணத்தில் ரூ.3 கோடியை கொரானா நிவாரண நிதியாக வழங்கவுள்ளதாகவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சமும், திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சமும், தான் பிறந்து வளர்ந்த சென்னை ராயபுரம் தேசியநகர் பகுதியில் உள்ள தினக்கூலி பணிகளுக்கு செல்லும் மக்களுக்கு ரூ.75 லட்சமும் பகிர்ந்து கொடுக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ நடிகர் ராகவா லாரன்ஸ் போன்ற தன்னிகரற்ற கொடை வள்ளலை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இப்படி உதவுவது இவருக்கு புதுசும் இல்லை. நீங்க மனிதனில்லை மஹான். வாழ்க வாழ்க நீ எம்மான்’ என பாராட்டியுள்ளார்.
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…
தனுஷ் மற்றும்…
கங்குவா படத்திற்கு…
Pushpa 2:…