Categories: latest news

நீங்க ஹீரோ மெட்ரியலா? பிரதீப்பிடம் கேட்ட நிருபர்.. மைக்கை பிடிங்கி சரவெடி காட்டிய சரத்

Pradeep Ranganathan:
தமிழ் சினிமாவில் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக இருப்பவர் பிரதீப் ரெங்கநாதன். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் அந்தப் படத்திலேயே தான் யார் என்பதை நிருபித்தார். அடுத்த தலைமுறை இயக்குனர்களில் பிரதீப் கண்டிப்பாக பேசப்படும் இயக்குனராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக நடிகராக தன்னுடைய வெற்றிகளை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வருகிறார்.

இரண்டாவது படமான லவ் டுடே படத்தை அவரே இயக்கி அதில் அவரே ஹீரோவாகவும் நடித்தார். அந்தப் படமும் அவருக்கு அடுத்த வெற்றியை பெற்றுக் கொடுத்தது. கோமாளி மற்றும் லவ் டுடே இரண்டு படங்களுமே வெவ்வேறு கதைகளத்தில் வித்தியாசமான கதைகளத்துடன் அமைந்ததனால் மக்களிடையே பெரிதும் கவனம் ஈர்த்தார் பிரதீப். இவரை அடுத்த தனுஷ் என்றே அழைத்தனர்.

தனுஷ் காப்பி:

ஏனெனில் ஆரம்பத்தில் தனுஷின் உடல்மொழி, பேச்சு என அப்படியே இப்போது பிரதீப் எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் தனுஷும் இருந்தார். துருதுரு பேச்சு,இளசுக்கு உண்டான நக்கல், நையாண்டி  என தனுஷை பின்பற்றுகிறார் பிரதீப் என்றுதான் இவரை விமர்சித்து வந்தனர். ஆனால் அதற்கும் தற்போது பிரதீப் விளக்கத்தை கொடுத்துள்ளார். அதாவது நான் என்றைக்குமே அப்படி  நினைத்ததில்லை என்று கூறியிருக்கிறார்.

அடுத்து பிரதீப் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் டியூட். இதுவும் 2 கே கிட்ஸுகளுக்கு உண்டான படமாகத்தான் தயாராகியிருக்கின்றன. பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். இவர்களுடன் கூடவே சரத்குமார், ரோகிணி என பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். சமீபத்தில்தான் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

நிருபர் கேட்ட கேள்வி:

படம் தீபாவளி ரிலீஸாக வரும் 17 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. படத்தின் புரோமோஷன் வேலைகளில் தற்போது பிரதீப் சரத்குமார் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஹைதராபாத்தில் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இருக்க அப்போது பெண் நிருபர் ஒருவர் பிரதீப்பிடம் ‘இதை நெகட்டிவ்வாக நினைக்க வேண்டாம். நீங்க ஹீரோ மெட்ரியலே கிடையாது. ஆனால் தொடர் வெற்றிக்கு காரணம் உங்களுடைய கடின உழைப்பா? இல்ல லக்கா’என கேட்டார்.

பிரதீப் மைக்கை எடுத்து பேசப் போக உடனே அந்த மைக்கை வாங்கி சரத்குமார் ‘சாரி பிரதீப். மைக்கை வாங்கிக் கொண்டேன்’ என கூறி அதற்கான பதிலை நான் கூறுகிறேன் என தொடர்ந்தார். இந்த துறையில்தான் இருக்கிறேன். 170 படங்களில் நடித்திருக்கிறேன். உங்களால் A to Z  சொல்லமுடியாது யார் ஹீரோ மெட்டிரியல்னு. ஒவ்வொருவரும் ஹீரோ மெட்டிரியல்தான். 

ஹீரோ மாதிரி இருக்க, அதற்கு என ஏதாவது அடையாளம் இருக்கா? இல்லையே. ஒருவர் அவர் செய்யும் செயலால் சமூகத்திற்கு நல்லது நடக்கிறது என்றால் அவர்தான் ஹீரோ என நிருபர் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்தார் சரத்குமார். 

Published by
ராம் சுதன்