சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நடிகர் விஜய்யின் ரசிகர் பாலாவின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலமாக அறுதல் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.
கொரோனா லாக்டவுன் காரணமாக நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் நான்கு மாதங்களுக்கு மேலாக ரிலீஸ் ஆகவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த பாலா என்ற விஜய் ரசிகர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்கொலைக்கு முன்னதாக பாலாவிஜய் தனது கடைசி டிவிட்டில் ‘தலைவன் படத்தை பார்க்காமலேயே செல்கிறேன். தலைவனையும்’ என டிவீட் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக இணையத்தில் பலரும் அந்த ரசிகரின் குடும்பத்துக்கு தங்கள் இரங்லை தெரிவித்து வந்தனர்.
தனது கல்வி சான்றிதழ்கள் எரிந்து போனதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த விஷயம் சம்மந்தமாக தற்கொலை செய்துகொண்ட பாலாவின் அக்கா மற்றும் அவரது கணவரிடம் தொலைபேசி மூலமாக பேசி சொல்லியுள்ளாராம் விஜய். அப்போது ‘இப்படி செய்யலாமா? எந்தவொரு விஷயத்துக்கும் தற்கொலை தீர்வாகுமா?. நீங்கள் அவனை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை’ என தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தளபதி 69…
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…