More

நீ எங்களுக்கு தேவையில்லை என்று ஒதுக்கினார்கள் – பாலிவுட்டின் வேஷத்தை கிழித்த ரசூல் பூக்குட்டி!

அந்த வகையில் நேற்று இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் பேட்டி ஒன்றில் இந்தி திரையுலகில் தனக்கு வரும் நல்ல பட வாய்ப்புகளை பறிக்க ஒரு கும்பல் காத்திருக்கிறது.  தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர் என்னை சந்தித்த போது கூட பலரும் அவரை என்னிடம் செல்ல வேண்டாம் என கூறி தடுத்தனர்.

Advertising
Advertising

ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா, என்னிடைய தம்பி ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு தென்னிந்தியர் என்பதால் வட இந்திய சினிமாவில் ஆளுமை செலுத்துவதை அங்குள்ள சில கும்பல் விரும்பாமல் அவருக்கு வரும் பட வாய்ப்புகளை கெடுப்பதாக கூறியுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற ஆளுமைபடைத்த இசை ஜாம்பவானுக்கே இந்த நிலைமையா…?  என பலரும் ரஹ்மானுக்கு ஆதரவாக இந்தி திரையுலகினர் மீது கடும் கோபத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ரஹ்மானை தொடர்ந்து ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டியை பாலிவுட்டில் உள்ள சில தயாரிப்பு நிறுவனங்கள் என் முகத்திற்கு நேராகவே ”நீங்கள் எங்களுக்கு தேவையில்லை” என கூறியதாக வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் ஆடியோ மிக்ஸிங்கில் அசகாய திறமையாளரான ரசூல் பூக்குட்டி ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த ஆடியோ மிக்ஸிங்கிற்கான ஆஸ்கர் விருதை வென்றவர். இவர் எந்திரன், நண்பன், 2.0, ரெமோ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts