More

லீடிங் நடிகரை டீலில் விட்ட இளம் இசையமைப்பாளர்!

தமிழின் மூத்த நடிகர், இளம் இயக்குனர் கூட்டணியில் புதிய பட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. வாரிசுடன் அந்தப் படத்தில் முதல்முறையாக நம்ம நடிகர் களமிறங்குகிறார். பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாராகும் படத்துக்கான வேலைகளும் அடுத்தடுத்து வேகம்பிடித்திருக்கின்றன. 

Advertising
Advertising

நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு, ப்ரீ புரடக்‌ஷன் என படக்குழு விறுவிறுப்பாக வேலைகளைப் பார்த்து ஷூட்டிங்கையும் தொடங்கிவிட்டது. திடீரென அந்தப் படத்துக்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த இளம் இசையமைப்பாளர் விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார். இது கோடம்பாக்கத்தின் பெரிதாக விவாதிக்கப்பட்டது. லீடிங் நடிகரை இளம் இசையமைப்பாளர் டீலில்விட என்ன காரணம் என்று விசாரித்தால், பல காரணங்களைச் சொல்கிறார்கள். 

அதில், முக்கியமானது இசையமைப்பாளரின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் படங்கள். ஏறக்குறைய அரை டஜன் படங்களுக்கு மேல் அவர் முடித்துக் கொடுக்க வேண்டி இருக்கிறதாம். இதனால்தான் அவர் விலகிக் கொண்டார் என்கிறார்கள். அதேபோல், லீடிங் நடிகரின் இயக்குனரோடு ஏற்பட்ட லடாயும் அவரை இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது என்ற பேச்சும் அடிபடுகிறது. 

Published by
adminram

Recent Posts