
சென்னையில் பல்வேறு பெண்கள் விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் விடுதியில் வைஃபை பிரச்சினை இருப்பதாக கூறி செல்போன்களை திருடிச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது.
சென்னையில் பல இடங்களில் இருக்கும் பெண்கள் விடுதியில் ஒரே மாதிரியான திருட்டு சம்பவம் கடந்த ஒரு வாரமாக நடந்து உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர் காலை 7 மணிக்கு வகை விடுதிக்குள் நுழைந்து வைஃபை இந்த பிரச்சினை இருப்பதாக கூறி பெண்கள் அனைவரையும் ஒரே இடத்தில் மொபைலை சார்ஜ் போடும்படி சொல்கிறார்.
அப்போது வைபையை சரி செய்வது போல அங்கு சார்ஜ் போட்டிருக்கும் மொபைல் போன்களை திருடிக்கொண்டு சென்றுள்ளார். இதுபோல இதுவரை 34 பெண்களின் செல்போன்களை அவர் திருடி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் துரிதமாக அந்தந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கேமராக்களை சோதனை செய்தபோது சம்பந்தப்பட்ட நகரை சேர்ந்த நபரை அடையாளம் கண்டுள்ளனர். அவர் தண்டையார்பேட்டை வாஉசி நகரை சேர்ந்த பாலாஜி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவரை கைது செய்த போலீசார் இப்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.