
மும்பை குர்லா ரயில்நிலையத்தில் நின்று கொண்டிருந்த சேதுராம் என்பவர் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முமபை குர்லா ரயில் நிலையம் ரயிலின் வருகைக்காக பயணிகள் சூழ காத்திருந்தது. அப்போது ரயில், ஸ்டேஷன் நோக்கி வர பயணிகள் அனைவரும் அதில் ஏற ஆயத்தமானார்கள். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த ஒருவர் தண்டவாளத்தில் குதித்து தலைவைத்துப் படுத்துகொண்டார்.
இதில் ரயில் அவர் மேல் ஏறி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி மக்களை பதைபதைக்க வைத்துள்ளது.

Leave a Reply