More

சரக்கு என சொல்லி சுக்கு காபியை விற்ற இளைஞர்கள்! ஏமாந்த ‘குடி’ மகன்கள்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக 11 லட்சத்தை எட்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் சரக்குக் கிடைக்காமல தவித்து வருகின்றனர். ஆங்காங்கே கள்ளச்சந்தையில் சரக்குகள் விற்கப்படுவதாகவும் அவை சாதாரண நாட்களை விட மூன்று மடங்கு அதிகவிலைக்கு விற்கப்படுவதாகவும் சொல்லபப்டுகிறது.

Advertising
Advertising

இந்நிலையில் இப்படி குடிப்பவர்களின் ஆசையை பயன்படுத்திக் கொண்டு ஒரு கும்பல் அவர்களை நூதனமாக ஏமாற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை மது கிடைக்குமா என ஒரு கும்பல் காத்திருந்துள்ளது. அங்கே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அங்கிருந்தவர்களிடம் தங்களிடம் மது உள்ளதாகக் கூற, அதை நம்பிய அவர்கள் ஒரு பாட்டிலை 300 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர்.

பாட்டிலை விற்றவதும் அங்கிருந்து வேகமாக செல்ல வாங்கியவர்கள் சரக்கைக் குடிக்கலாம் என திறந்தபோது பாட்டிலில் இருந்தது சரக்கு அல்ல சுக்குக்காபி எனக் கண்டுபிடித்துள்ளனர். குடி ஆசையால் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Published by
adminram