நா என்ன புண்ணியம் பண்ணேனோ தெரியல...? குழந்தை பிறந்ததை அறிவித்த பிரபல youtuber இர்பான்..!

by ramya suresh |

தமிழில் youtube இல் மிகப் பிரபலமான செலிபிரிட்டிகளில் ஒருவராக வளம் வருபவர் இர்பான். ரோட்டு கடை முதல் 5 ஸ்டார் ஹோட்டல் வரை அனைத்து இடங்களுக்கும் சென்று உணவுகளை ருசி பார்த்து மக்களுக்கு ரிவியூவாக கொடுத்து வருபவர். இர்பான் வியூ என்ற youtube சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். அதிலும் இவர் அசைவ உணவுகளை சாப்பிட்டு ரிவ்யூ சொல்வதை பார்ப்பதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

youtube ஐ தாண்டி பேஸ்புக்கிலும் பல லட்சம் ரூபாயை சம்பாதித்து வருகின்றார் இர்பான். அது மட்டுமில்லாமல் தற்போது இர்பானுக்கு தொடர்ந்து பல நல்ல விஷயங்கள் நடந்தது. இவர் ஆலியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பிறகு அவரது மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில் மிக சிறப்பாக வளைகாப்பு எல்லாம் நடந்து முடிந்தது.

இடையில் வெளிநாட்டிற்கு சென்று குழந்தையின் பாலினம் பற்றிய தகவலை அறிந்து வந்து அதை வீட்டில் மிகப் பெரிய பார்ட்டியாக வைத்து அறிவித்ததை பார்த்த சுகாதாரத் துறையினர் இவர் மீது புகார் கொடுத்திருந்தனர். மேலும் தங்களது வீடியோ தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்கள். இதையடுத்து இர்பான் தனது youtube பக்கத்தில் இருந்து அந்த வீடியோவை டெலிட் செய்தது மட்டும் இல்லாமல் மன்னிப்பு கோரி வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கண்டஸ்டண்டாக பங்கு பெற்றிருக்கும் இர்பான் மிகச் சிறப்பாக சமைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் தனது குழந்தையின் கையை பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்துடன் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.

திடீரென்று எல்லாமே மாறிவிட்டது. என் இளவரசி இப்போது என் கையில், என்ன நல்லது பண்ணி இருக்கேன்னு தெரியல? எனக்கு இப்படி ஒரு சந்தோஷம் கிடைச்சிருக்கு, இதை எப்படி திருப்பி கொடுக்கப் போறேன்னு புரியல.. ஆனா இது ஒரு மிராக்கில்.. அல்லாஹ்வுக்கு நன்றி" என்று அவர் பகிர்ந்து இருந்தார். இந்த செய்தியை பார்த்த அவர் ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Next Story