
போனிகபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டும்தான் இப்போதைக்கு ரசிகர்களுக்கு ஆறுதல். வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. எனவே, படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் அஜித் அறிமுகமாகும் துவக்கப்பாடல் பற்றி இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களிடம் கூறியுள்ளார். இப்படத்தின் டைட்டில் சாங் என அழைக்கப்படும் துவக்கப்பாடலுக்கு ‘கும்தா’ என பெயர் வைத்துள்ளோம். இப்பாடல் அஜித் ரசிகர்களை தியேட்டரில் நடனமாட வைக்கும் என அவர் கூறியுள்ளார். மேலும், இப்படத்தில் ஒரு அருமையான அம்மா செண்ட்மெண்ட் பாடலும் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.





