ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகும் கே.ஜி.எஃப் 2...

by adminram |

83bea2418011c53ef995429b91510957-2

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப். படம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரீச்சானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளில் இப்படம் வரவேற்பை பெற்றது. தற்போது கே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பின் பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ என்கிற புதிய படத்தை பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.

66bb07aad7a9e2b7b5fbfc435d670173-1

தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில், கேஜிஎஃப் 2 படத்தை ரூ.250 கோடி வரை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ஆனால், இப்படம் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் என அப்படத்தின் தயாரிப்பாளர் முடிவெடுத்துள்ளார். எனவே, அடுத்த வருடம் துவக்கத்தில் இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகலாம் என செய்திகள் வெளிவந்துள்ளது.

6971898eb3a47c8f42c537a27d5cb884

இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் எனும் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இந்த தொலைக்காட்சியிலேயே கேஜிஎஃப் 2 வெளியாகவுள்ளது. அதேநேரம் தியேட்டர் ரிலீஸுக்கு பின்னரே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

e5a2825ecf673a2a578493bb294dae0f-2

Next Story