அர்ஜுனுக்கு பொட்டி பொட்டியா கொட்டி கொடுத்த ஜீ தமிழ் - தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடலாம்!
தமிழ் தொலைக்காட்சிகள் இப்போதெல்லாம் ஹாலிவுட் சேனலுக்கு சமமாக trp ரேட்டிங்கில் பிரம்மிக்க வைத்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதில் வாங்கிய சம்பளத்தை வைத்தே அரசியலில் இறங்கியதாக பேச்சுக்கள் அடிபட்டது.
ஒவ்வொரு சீசனுக்கும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் கமல் பிக்பாஸ் 3 சீசனில்ரூ. 100 கோடி வாங்கியதாக செய்திகள் வெளியானது. அடுத்ததாக விஜய் டிவிக்கு போட்டியாக இருப்பது ஜீ தமிழ் தொலைக்காட்சி தான். அதில் பிக்பாஸ் போன்றே பிரபல நட்சத்திர நடிகரான அர்ஜுன் Survivor என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இதில் அவருக்கு சம்பளம் ரூ. 5 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகிறது. நிகழ்ச்சியில் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் survive பண்ணி வாழ்ந்து காட்டுபவர் வின்னராக அறிவிக்கப்படுவார். அதிலும் உணவு மற்றும் நெருப்பு போன்ற அத்தியாவசிய தேவைக்கு கடும் தட்டுப்பாடு நிலவி டாஸ்க்கள் மிகவும் கடினமானதாக கொடுக்கப்படுவதால் நிகழ்ச்சியின் ஸ்வாரசியம் அதிகரித்துள்ளது. எனவே அடுத்தடுத்த சீசனில் அர்ஜுனின் சம்பளம் பலமடங்கு அதிகரித்து அவரின் தலைமுறை ஓஹோன்னு ஆகிடும்போல.இப்படியே போனால் விஜய் டிவி லிஸ்ட்லே காணாமல் செய்துவிடும் ஜீ தமிழ்.