×

நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று.......என நெஞ்சைத் தாலாட்டிய பொன்னுமணி 

 
fsafsa

1993ல் வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம் பொன்னுமணி. ஆர்.வி.உதயகுமார் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், சௌந்தர்யா, சிவகுமார், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. 

படத்தில் சௌந்தர்யா நடிப்பு செம மாஸ். கார்த்திக் நடிப்பில் வழக்கம்போல துருதுரு என வந்து துள்ளிக்கொண்டு வெத்தலப்போட்ட வாயால பேசுவது போல பேசி படம் முழுவதும் கலகலப்பாக்கியிருப்பார். இந்தப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய கார்த்திக் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதைத் தட்டிச் சென்றார். 

மாமானார் சிவகுமார் இறந்ததும் ஓடோடி வந்து கனத்த இதயத்துடன் அழும் அவரது நடிப்பு ரசிகர்களின் கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும். அப்போது அவருக்கு இசைஞானி ஒரு பாடலை கொண்டு வந்திருப்பார் பாருங்க. பாடல் நம் இதயத்தைக் கனக்க வைத்து விடும். அன்பை சுமந்து சுமந்து என்ற அந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருப்பார். 

fsa

நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா? என்ற பாடல் இப்போது கேட்டாலும் நாம் அந்த இசைக்காகத் தலையை ஆட்டாமல் இருக்க முடியாது. ஆத்து மேட்டுல முத்தம் ஒண்ணு கொடுத்தா மொத்தக் கடன் தீராது பாடல் துள்ளல் இசைப் பாடல். நம்மை சுறுசுறுப்பாக்கும். ஆடிப்பட்டம், சிந்து நதி செம்மீனே பாடல் சூப்பர். அடியே வஞ்சிக்கொடி பாடலை ராகதேவன் இளையராஜா பாடி மாஸ் வாங்கி இருப்பார். 

இதற்கு முன்னதாக ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கிழக்கு வாசல் படத்தில் கார்த்திக் நடித்துள்ளார். படம் செம மாஸானது. இது இரண்டாவது படம். இதுவும் செம ஹிட் தான். 

நடிகை சௌந்தர்யா அறிமுகமான படம் இது. ஆனால் அவரது நடிப்பைப் பார்த்தால் அறிமுகம் மாதிரியே இருக்காது. அவ்வளவு அற்புதமான நடிப்பு. 

கதை இதுதாங்க... 

கிராமத்தில் வசிக்கும் கார்த்திக் அவரது மாமனார் சிவகுமார் மீது அளவு கடந்த பாசம், அன்பு, மரியாதை என அனைத்தையும் வைத்துள்ளார். இந்தக் காலத்தில் அப்படிப்பட்டவர்கள் அமைவது சாத்தியமில்லை. எல்லாம் சினிமாவில் தான் போலும். 

அவரது மகள் சௌந்தர்யாவை சிறு வயதிலிருந்தே உயிருக்கு உயிராக காதலிக்கிறார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சிவகுமார் முடிவு செய்கிறார். 

fasdf

ஆனால், பட்டணத்திலிருந்து படிப்பு முடித்து வரும் சௌந்தர்யாவோ மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கிறார். அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து அந்த நபரை கார்த்திக் கொலையும் செய்து விடுகிறார். 

5 ஆண்டுகள் சிறைவாசம் சென்று விடுதலையாகிறார் கார்த்திக். திரும்பி வந்ததும், சௌந்தர்யாவையும், அவரது குழந்தையையும் அரவணைத்துப் பாதுகாக்கிறார். 

கார்த்திக் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். கவுண்டமணி - செந்தில் காமெடி படத்தை இன்னும் கலகலப்பாக்கிறது. காதல், குடும்பம், காமெடி, சென்டிமென்ட் என படம் சிறந்த படைப்பாக வந்துள்ளது. 

zvv

இப்படத்தின் விசேஷம் என்னவென்றால் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தான் என்பது ஆச்சரியமாக உள்ளது. படத்தை 48 நாள்களில் எடுத்துள்ளார் என்பது இன்னும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயமாகும்.

13.9.1960ல் சென்னையில் நடிகர் முத்துராமனுக்கு மகனாகப் பிறந்தார் முரளி கார்த்திகேயன். இதுதான் இவரது இயற்பெயர். இன்று அவருக்கு பிறந்தநாள்.

sfafs

 4 முறை பிலிம்பேர் விருதையும், தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும், கலை மாமணி விருதையும் பெற்றுள்ளார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகிய இந்த நவரச நாயகனின் நடிப்பின் அலைகளும் இன்னும் ஓய்வதில்லை. 

இவரது மகன் கௌதம் கார்த்திக் தற்போது சினிமாவில் இளம் தலைமுறை கதாநாயகனாக தூள் கிளப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கார்த்திக்கிற்கு நம்ம டீம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News