×

நெற்றிக்கண் பாடல் ரிலீஸ்....
கவுண்டவுன் ஸ்டார்ட்...!

 
netrikan

தமிழ்சினிமாவின் நம்பர் 1 நாயகி இடத்தை இன்று வரை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவருக்கு தற்போது முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று ஆசை. அதனடிப்படையில் அமைந்ததுதான் நெற்றிக்கண். இப்படத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கிறார். இதற்கு முன் நாயகிகளில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் சிம்ரன் தான் இப்படி பார்வையற்றவராக நடித்துள்ளார். ஆனால் கதாநாயகர்கள் கமல், விக்ரம் போன்ற நடிகர்கள் பார்வையற்றவராக ஏற்கனவே நடித்துள்ளனர்; என்பது குறிப்பிடத்தக்கது. 

பிளைண்ட் என்கிற தென்கொரியா படத்தின் ரீமேக் தான் நெற்றிக்கண். ஏற்கனவே போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தப்படம். இந்த படத்தின் முதல் பாடல் நாளை (புதன்கிழமை) வெளியாகிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் இப்போது இருந்தே கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது என்றே சொல்லலாம். 

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அவள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ் நயன்தாராவை வைத்து நெற்றிக்கண் படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வையற்றப் பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, பார்வையில்லை என்றாலும் தனது அறிவாற்றலால் கொடூரமான சீரியல் கில்லரை எப்படி கண்டுப் பிடிக்கிறார் என்பதே கதைக்களம் என்று சொல்லப்படுகிறது. 

சமீபத்தில் பாடகர் சித் ஸ்ரீPராம் பாடியுள்ள இப்படத்தின் முதல் பாடலான 'இதுவும் கடந்து போகும்' பாடல் வெளியாகும் என்று அறிவித்தனர். தொடர்ந்து விரைவில் வெளியாகும் என்ற அறிவித்துக்கொண்டே வந்து வந்து ஒருவழியாக இன்றுதான், 'இதுவும் கடந்துபோகும்' பாடல் நாளை (9ம் தேதி) காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

க்ரிஷ் இசையில் '96' படப்புகழ் கார்த்திக் நேத்தா இப்பாடலை எழுதியிருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே, கார்த்திக் நேத்தா வரிகளில் 'வாகை சூடவா' படத்தின் 'போறானே.. போறானே', 'திருமணம் என்னும் நிக்காஹ்' படத்தில் 'என்தாரா என்தாரா நீயே என் தாரா', 'நெடுஞ்சாலை' படத்தில் 'தாமிரபரணியில் நீந்தி வந்த' பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்ததோடு இப்போதும் பலரின் ஃபேவரைட் லிஸ்ட்டில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

நயன்தாரா வெகு கவனமாக கதையைத் தேர்வு செய்து நடித்துள்ளார். முழுக்க முழுக்க அவருக்கு முக்கியம் தரும் கேரக்டர்களில் மட்டுமே இனி நடிப்பது என்று முடிவு செய்திருந்த நயன்தாராவுக்கு இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் மட்டுமே இந்தப்படத்தை தேர்வு செய்து நடித்துள்ளார். அவரது கடின உழைப்புக்கு இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உலவுகிறது. 

இந்தப்படத்தின் பாடல் ரிலீஸைப் பொறுத்தவரை சின்ன நியூமராலஜி ஒர்க் அவுட் ஆகிறது. ஒரு சிலர் நயன்தாராவை 9 தாரா என்பதுண்டு. அதன்படி இந்தப் பெயரிலும் 9 உள்ளது. நாளை தேதி 9. பாடல் வெளியாகும் நேரமும் காலை 9 மணி தான்...என்று ஹாட்ரிக் அடித்துள்ளது 9. அது சரி படம் வெற்றி பெற்றால் சரிதான்.

From around the web

Trending Videos

Tamilnadu News