முதல்வரிடம் உதவி கேட்ட நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!

 
முதல்வரிடம் உதவி கேட்ட நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!

முத்துக்காளை மனைவி!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் ஆக இருந்து வந்தவர் தான் நடிகர் முத்துக்காளை. அவரது மனைவிக்கு விபத்து ஒன்று நேரிட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வந்தார்.

முதல்வரிடம் உதவி கேட்ட நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!

பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவிக்கு தற்போது நுரையீரல் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக சிகிச்சை பெற மேல் சிகிச்சைக்காக அதிக பணம் தேவைப்படுகிறது.

எனவே தயவு கூர்ந்து முதல்வர் தளபதி விஜய் அவர்கள் என்னுடைய மனைவியை காப்பாற்ற போதுமான மருத்துவ செலவுக்கு பண உதவி செய்தால் அது பெரிய உதவியாக இருக்கும் என்று முதல்வர் விஜய்யிடம் வேண்டி கேட்டுக் கொண்டார்.

மனைவி காலமானார்.

முதல்வரிடம் உதவி கேட்ட நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!

இந்த விஷயம் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த நிலையில் தற்போது துரதிஷ்டவசமான தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.

ஆம் நடிகர் முத்துக்காளை மனைவி காலமாகிவிட்டார். கடந்த 19 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 9 மணிக்கு காலமானதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

From Around the web