உலகநாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெற்றுவிட்டது. அதனால் அவர் அடுத்தடுத்து தனது படங்களை முடித்து அதனை அடுத்தடுத்து வெளியிட முடிவு செய்திருந்தார் கமல்ஹாசன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக விக்ரம் பட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
அப்படி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதால் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு விட்டது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உட்பட உதவி இயக்குனர்கள், டெக்னிஷியன் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாம். அதானால், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தற்போது தள்ளி போய் உள்ளது.
விக்ரம் படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் அடுத்ததாக தலைவன் இருக்கிறான் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்தார். ஆனால், இந்த கொரோனா தொற்று காரணமாக விக்ரம் பட ஷூட்டிங் தள்ளிப்போனதால் சற்று வருத்தத்தில் இருக்கிறாராம் கமல்ஹாசன்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…