Categories: Cinema News latest news throwback stories

சரத்குமாரின் முதல் மனைவியிடம் இருந்த பிரிய இந்த நடிகை தான் காரணமாம்.. வெளிவந்த ஷாக் தகவல்

தமிழ் நடிகர் சரத்குமாருக்கும், அவர் மனைவியா சாயாவிற்கு விவகாரத்து ஆனதற்கு இந்த கோலிவுட் நடிகை தான் முக்கிய காரணம் என்ற தகவல்கள் வெளியானது.

1986ம் ஆண்டு சினிமா உலகில் நடிகராக அறிமுகமானவர் சரத்குமார். ஆனால் அவரின் முதல் படம் தமிழுக்கு இல்லை தெலுங்கு திரையுலகிற்கு தானாம். அதைப்போல சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் முதலில் சரத்குமார் தான் நடிக்க இருந்தார். அது தமிழில் முதலில் படமாக அவருக்கு இருந்து இருக்கும். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தெரிந்த முகமாக இருக்க வேண்டும் எனக் கேட்க அப்பாத்திரத்தில் பிரபு நடித்தார்.

nagma

பின்னர் கண் சிமிட்டுன் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அப்படத்தினை அவரே தயாரித்தும் இருந்தார். அடுத்து அவரின் கேரியரில் மிகப்பெரிய ஏற்றமாக அமைந்தது. தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்தது. அவரை ரசிகர்கள் சுப்ரீம் ஸ்டார் என அழைத்தனர்.

சரத்குமார் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். இந்த நேரத்தில் சரத்குமாருக்கு நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதல் கோலிவுட்டில் வைரலாக பரவியது.

Sarath kumar

சாயாதேவி தன் கணவரை மீட்டு தரவேண்டி முதல்வர் அலுவலகத்திற்கு லெட்டர் எழுதிய சம்பவம் எல்லாம் நடந்தது. இதை தொடர்ந்தே இருவரும் திருமண வாழ்க்கையை முறித்து கொண்டனர். 16 வருட திருமண வாழ்க்கையை 2000ம் ஆண்டில் விவகாரத்து வாங்கி பிரிந்து சென்றனர். நக்மாவை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் அதற்கடுத்த வருடமே 2001ம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Shamily