Connect with us
tamil gossips

Gossips

நடிச்சா ஹீரோயின் தான்… இந்த வயசுலயும் கண்டீசன் போடும் முன்னணி நடிகை….

சினிமாவ பொருத்தவரைக்கும் ஹீரோயின்களுக்கு மிக குறைந்த ஆயுட்காலம் என்று தான் கூற வேண்டும். வயதானாலோ அல்லது திருமணம் முடிந்து விட்டாலோ அந்த நடிகைக்கு மார்க்கெட் அவ்வளவு தான். அடுத்து அவரை அக்கா அண்ணி போன்ற கேரக்டருக்கு தான் அழைப்பார்கள்.

இளம் நடிகைகளுக்கே இந்த நிலை தான் நீடித்து வருகிறது. ஆனால் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் டாப்பில் இருந்தவர் தான் அந்த மூன்றெழுத்து நடிகை. மிகவும் குறுகிய காலத்திலேயே தனது நடிப்பு மற்றும் முகபாவனைகள் மூலம் முன்னணி இடத்தை பிடித்தார் அந்த நடிகை.

தொடர்ந்து டாப் நடிகையாக இருந்த சமயத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்து கதைகள் கேட்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிகை மீண்டும் நடிக்க வருவதை அறிந்த சில தயாரிப்பாளர்கள் நடிகையை சந்தித்து பேசியிருக்கிறார்கள். ஆனால் நடிகையோ அவர்களிடம் சில நிபந்தனைகளை விதித்து உள்ளாராம். அதற்கு சம்மதித்தால் மட்டுமே நடிப்பேன் என மிகவும் கறாராக கூறி விட்டாராம்.

அதன்படி நடிகை கூறியதாவது, “இனிமேலும் நான் கதாநாயகியாகத்தான் நடிப்பேன். அக்காள், அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன்” என்பது தான் அந்த நிபந்தனை. அதுமட்டுமல்ல அந்த நிபந்தனைக்கு ஏற்றபடி தான் நடிகையும் கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறாராம்.

இத்தனை ஆண்டுகள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை நடித்தால் ஹீரோயினா தான் நடிப்பேன் என கூறுவது எந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகும் என்பது தெரியவில்லை.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Gossips

To Top