கோலிவுட்டில் விஜய் அஜித் என இரண்டு டாப் நடிகர்களையும் வைத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் எஸ்ஜே சூர்யா. இவர் திரையுலகில் அறிமுகமானது என்னவோ இயக்குனராகத்தான். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் நடிகரா இவர் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் எஸ்ஜே சூர்யாவின் வில்லத்தனத்தை கண்டு ஒட்டுமொத்த திரையுலகும் மிரண்டு விட்டது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
எஸ்.ஜே.சூர்யா தற்போது கடமையை செய், டான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர புதிதாக ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் எஸ்ஜே சூர்யா, “விஜய்க்கு மாற்று சிவகார்த்திகேயன்தான்” என கூறியதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது.
இதனை தற்போது எஸ்ஜே சூர்யா மறுத்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது, “நான் கூறவந்தது என்னவென்றால், ஒவ்வொரு குடும்பத்திலும் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் தனி இடம் உள்ளது.
இதைதான் நான் கூறவந்தேன். ஆனால் ஊடகங்களிடம் இருந்து இதுபோன்ற ஒரு தலைப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை” என கூறியுள்ளார்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…