நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. இது சிவகார்த்திகேயனின் 20வது திரைப்படமாகும்.
இப்படத்தை கே.வி. அனுதீப் இயக்கவுள்ளார். இவர் சமீபத்தில் தெலுங்கி ஹிட் அடித்த ‘ஜதி ரத்னலு’ படத்தை இயக்கியவர் ஆவார். இப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என 2 மொழிகளிலும் உருவாகும் எனத்தெரிகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் இசையமைத்துள்ளார்.புத்தாண்டையொட்டி, இப்படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது டான், அயலான் என இரு படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…