×

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளுக்கு 6 மாதமாக பாலியல் தொல்லை – மைனர் சிறுவர்கள் உள்பட 10 பேர் கைது!

நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் சகோதரிகள் இருவருக்கு 10 பேருக்கு மேல் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் சகோதரிகள் இருவருக்கு 10 பேருக்கு மேல் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் அணைப்பாளையத்தை பழனியம்மாள். கணவனை இழந்த பழனியம்மாளுக்கு 14 மற்றும் 13 வயதில் இரு மகள்கள் உள்ளனர். பழனியம்மாள் தனியார் ஜவ்வருசி ஆலையில் பணிபுரிந்து வருகிறார்.இதனால் அவர் பகல் முழுவதும் வீட்டில் இருக்க மாட்டார். மகள்களுக்கு கொரோனா காரணமாக பள்ளி இல்லாததால் வீட்டில் தனியாக இருக்க வேண்டிய சூழல்.

இதைப்பயன்படுத்திக் கொண்ட சிறுமிகளின் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் சிலர் அவர்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளனர். இந்த கொடுமை 6 மாதக் காலமாக நடந்துள்ளது. இதைப்பற்றி யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் அவர்கள் குழம்பியுள்ளனர். ஒரு கட்டத்தில் இதுபற்றி அவர்கள் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தெரிவிக்க அவர்கள் மூலமாக ராசிபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு சிவா, சண்முகம், முத்துசாமி, மணிகன்டன்,சூர்யா,செந்தமிழ்செல்வம், வரதராஜ், பெரியசாமி ஆகியோரைக் கைது செய்துள்ளனர். இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால் அதில் இரண்டு பேர் மைனர் சிறுவர்கள் மற்றும் இருவர் வயதான முதியவர்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News