×

மங்காத்தா வெளியாகி 10 வருடங்கள்... இப்போதும் மாஸ் காட்டும் தல அஜித்...

அஜித் நடிப்பில் மங்காத்தா திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 வருடங்கள் ஆகிறது...
 
mankatha
ஹைலைட்:
இப்படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிவிட்டதை தல அஜித் ரசிகர்கள் இன்று காலை முதலே டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் தல அஜித் நடித்து 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் அஜித்தோடு திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, ராய் லட்சுமி, வைபவ், அஞ்சலி,ஆண்ட்ரியா, மஹத் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

ajith
ajith kumar

இப்படத்தில் போலீஸ்காரராகவும், பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு வில்லன் வேடத்தில் அஜித் நடித்திருந்தார். ஆனாலும், படம் அஜித் ரசிகர்களை மிகவும் கவர்ந்து மாபெரும் ஹிட் ஆனது. குறிப்பாக இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா போட்ட தீம் மியுசீக் அஜித்திற்கு மாஸ் ஹீரோ இமேஜை ஏற்படுத்தியது. பாடல்களும் செம ஹிட் ஆனது. 

mankatha
Mankatha

இப்படம் 2011ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் தேதி ரிலீஸ் ஆனது. எனவே, இப்படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிவிட்டதை தல அஜித் ரசிகர்கள் இன்று காலை முதலே டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.  #DecadeOfKWPrideMANKATHA என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.  

mankatha
Mankatha

பல வருடங்களாகவே மங்காத்தா 2 எப்போது உருவாகும் என வெங்கட் பிரபுவிடம் தல அஜித் ரசிகர்கள் நச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News